பொது இடங்களில் போனுக்கு சார்ஜ் செய்பவரா நீங்க? உஷாராக இருங்க !
ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக செல்போனுக்கு சார்ஜ் செய்யும் வசதி உள்ளது. இதில் சில இடங்களில் யூஎஸ்பி போர்டுகள் உள்ளன.
ஆனால், பொது இடங்களில் சார்ஜ் போடுவதால் உங்கள் செல்போனில் உள்ள தரவுகள் திருடப்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, பொது இடங்களில் யூஎஸ்பி போர்டுகள் மூலம் செல்போனுக்கு சார்ஜ் போட வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
அவரவர் கொண்டு செல்லும் சார்ஜரை பயன்படுத்தி செல்போனுக்கு சார்ஜ் செய்ய வேண்டும்.
சமீப காலமாக டெபிட், கிரெடிட் கார்டு விபரங்களை பயனர்களுக்கே தெரியாமல் அவர்களின் போன் வழியாகவே பெற்று, ஹேக்கர்கள் பணத்தை திருடும் சம்பவங்கள் அரங்கேறுவது குறிப்பிடத்தக்கது.
அதேப்போல், தவிர்க்க முடியாத நேரங்களில் பொது வைஃபை பயன்படுத்த வேண்டி வந்தால், பயன்பாட்டுக்கு பின்னர் போனை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும்.
ப்ளூடூத்துக்கு பயனர்கள் தங்கள் பெயரை வைப்பதைத் தவிர்க்கலாம். இதனால் உங்கள் விவரங்கள் பிறருக்கு எளிதில் தெரிந்து விட வாய்ப்புள்ளது.
அவ்வப்போது உங்கள் சாதனத்துடன் இணைக்கப்பட்டுள்ள ப்ளூடூத் டிவைஸ் குறித்து சோதனையிடலாம்.