ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் பால் குடிக்கலாமா?

மூளையில் ஏற்படும் பிரச்னையால் வருவதுதான் 'ஆட்டிசம்' என்கிற கோளாறு. குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு இருந்தால், ஒன்பது, - 18 மாதத்திற்குள் இதற்கான அறிகுறிகள் தெரியும்.

மரபணுக்கள், தடுப்பூசிகள், மன அழுத்தம், நோய்த் தாக்குதல்கள், கர்ப்பத்தில் உள்ள கருவின் மூளைக்கு சீரான ரத்த ஓட்டம் இல்லாதது என பல காரணிகளால் ஆட்டிச பாதிப்பு வரலாம் என்று தெரிந்தாலும், இதுதான் காரணம் என்று எதுவும் உறுதி செய்ய முடியவில்லை.

சத்தத்தைக் கேட்டு திரும்பாதது, கண்களை பார்த்துப் பேசாதது, இயல்புக்கு மீறிய சுறுசுறுப்பு, பொறுமை இருக்காது. ஒரே வார்த்தை, சத்தத்தை வெளிப்படுத்துவது, பேசுவதில் குறைபாடு இதன் அறிகுறிகள்.

ஆட்டிசம் குழந்தைகளுக்கு என தனித்திறமைகள் உண்டு. ஆர்வத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப பயிற்சி அளிக்க வேண்டும்.

ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு பால் பொருட்கள், துரித உணவுகளை கொடுக்கக் கூடாது.

ஒமேகா 3 உணவுகள், கீரை, ஸ்பைருலினா ஆகியவற்றை கொடுக்கலாம்.

அவர்களுடைய ஒவ்வொரு நிலை வளர்ச்சியையும் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். சரியான விகிதத்தில் வளர்ச்சி இல்லாதபோது உடனடியாக டாக்டரை அணுக வேண்டும்.