கோடையில் உண்டாகும் வயிற்றுப் போக்கை தவிர்க்க !

கோடையின் தீவிரம் தொடங்கி விட்டாலே, பலருக்கும் சருமப் பிரச்னைகள், தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு பாதிப்புகள் வரும்.

குறிப்பாக, வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், அதனால் உடனடியாக உடலில் நீர் இழப்பு ஏற்பட்டு சில நேரங்களில் ஆபத்தான நிலையும் ஏற்படலாம்.

எனவே, வாழைப்பழம், அரிசி சாதம், உருளைக்கிழங்கு, தயிர், சூப்கள், வேக வைத்த காய்கறிகள் ஆகியவற்றுக்கு கோடையில் முக்கியத்துவம் தரவேண்டும்.

கொழுப்பு நிறைந்த, எண்ணெயில் பொறித்த, வறுத்த மற்றும் காரமான உணவுகள், ஊறுகாய், காபி, மது, முழு தானியங்கள் போன்ற நார்ச்சத்து அதிகமான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

பால் பொருட்களுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் அவற்றை கட்டாயமாக தவிர்க்க வேண்டும்.

அதேப்போல், மென்பானங்கள், குளிர்பானங்கள், இனிப்புச் அல்லது சர்க்கரை மிகுந்த பானங்களையும் தவிர்க்கவும்.