அயோத்தி ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை: பக்தர்கள் நெகிழ்ச்சி

அயோத்தியில் ராமர் கோவிலில் சிலை பிரதிஷ்டை செய்யும் விழா கோலாகலமாக நடைபெற்றது.

கர்ப்ப கிரகத்தில் பால ராமர் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அதன் கண்களை மூடியுள்ள திரை அகற்றப்பட்டு, விக்ரஹம் உயிர்ப்பு பெறும் உச்சக்கட்ட சம்பிரதாயம் இது.

கோவில் கருவறைக்குள் நடந்த சங்கல்ப பூஜையில் பிரதமர் மோடி, மோகன் பகவத், உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டனர்.

சங்கல்ப பூஜையுடன் பிராண பிரதிஷ்டை எனப்படும் புனித நிகழ்வு நடைபெற்றது.

இன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைக்கு எதிரே 75 ஆண்டு பழமையான சிலையும் வைக்கப்பட்டுள்ளது.

ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு அயோத்தி நகர் விழாக்கோலம் பூண்டது.

இந்த நிகழ்ச்சியில் பா.ஜ., தலைவர்கள், முதல்வர்கள், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இஸ்ரோ தலைவர் சோம்நாத், துறவியர், மடாதிபதிகள், உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.