பல மருத்துவ குணம் கொண்ட தும்பையின் பயன்கள் இதோ!!

தும்பையில், ஸ்டீரால், ஆல்கலாய்டு, காளக்டோஸ், ஒலியனாவிக் அமிலம், பீட்டா சிட்டோஸ்டீரால் போன்ற வேதிப் பொருட்கள் கலந்துள்ளன.

அதிகாலையில் தும்பைப் பூவைப் பசும்பால் விட்டு அரைத்து சாப்பிட்டால் விக்கல் நீங்கும்.

தும்பை இலைச்சாறு 10 மி.லி,. எலுமிச்சை பழச்சாறு 10 மி.லி., வெங்காய சாறு 5 மி.லி., எண்ணெய் 5 மி.லி., கலந்து, காலையில், வெறும் வயிற்றில் சாப்பிட்டால், வயிற்று உபாதைகள் நீங்கும்.

தும்பைப் பூவை, வெள்ளாட்டுப் பாலில் கலந்து, காய்ச்சி வடிகட்டி, பாலை மட்டும், காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து, 40 நாட்கள் சாப்பிட்டால், பெண்களுக்கான, கர்ப்பப்பை நோய்கள் குணமாகும்.

தும்பைப் பூவையும், ஒரு மிளகையும் அரைத்து, நெற்றியில் பற்றுப் போட தலைவலி, தலைபாரம், நீர் கோர்வை நீங்கும்.

பூச்சிக்கடி குணமாக, தும்பை இலையை அரைத்து, சிறிதளவு உண்டு, பூச்சிக் கடிபட்ட இடத்தில் தேய்த்தால் கடி குணமாகும்; அதனால் ஏற்பட்ட தடிப்பு, அரிப்பு மறையும்.

தும்பை மற்றும் துத்தி இலை சாறு சிறிதளவு எடுத்து, பசும் பாலில் கலந்து கொடுத்து வர, உள் மூலம், புற மூலம், ரத்த மூலம் தீரும்.

வாயுவை அதிகரிக்கும் உணவுப் பொருட்களை உண்பதால் ஏற்படும் தொல்லையிலிருந்து விடுபட, தும்பை இலையின் சாறை, தொடர்ந்து 3 நாட்கள் காலையில் அருந்திவர குணமாகும்.