உணவில் வாழைப் பூவை சேர்ப்பதால்... !
துவர்ப்பு சுவையுடன் கூடிய வாழைப்பூவில் கால்சியம், பொட்டாஷியம், மக்னீஷியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் மற்றும் தாமிரம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
தொடர்ந்து இதை சாப்பிட உடலில் இன்சுலின் சுரப்பை அதிகரித்து, ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. சிறுநீரகக் கோளாறுகளை தீர்க்க உதவுகிறது.
மூல நோய் ஏற்படுவதை தடுக்கிறது. நார்ச்சத்து நிறைந்துள்ளதால் மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது.
ரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து ரத்தத்தை சுத்தப்படுத்துவதுடன், ரத்த அழுத்தம், ரத்த சோகை போன்ற பாதிப்புகளை தவிர்க்கவும் உதவுகிறது.
செரிமானப் பிரச்னையால் ஏற்படும் வயிற்று வலி, வயிற்றுப் போக்கு போன்ற பாதிப்புகளை தவிர்க்கலாம்.