ஏதோ பெரிய நோய் இருப்பதாக அச்சம்!
இல்லாத நோய்க்கு பயப்படும் ஒரு மனநல நோய்தான் இன்று பல முதியோரை பாடாய்படுத்துகிறது. இதன் பெயர் ஹைப்போகாண்ட்ரியாசிஸ் (Hypochondriasis) .
ஆழ்மன அழுத்தம், சிறுவயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவம், பிரச்னைக்கு முடிவு கிடைக்காத ஆற்றாமை நிலை போன்றவற்றில் இருந்து எப்படி விடுபடுவது என தெரியாமல் இருப்பதால் ஏற்படலாம்.
மேலும் சுற்றியிருப்போரின் ஆதரவு தேடுவதற்காக, தனக்கு ஏதோ நோய் இருப்பதாக சொல்லிக்கொள்வர்.
சில நேரங்களில் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றத்தாலும் இப்பாதிப்பு ஏற்படலாம்.
சாதாரண தலைவலி, இருமல், கட்டி இருந்தால் கூட, புற்றுநோய், மாரடைப்பு என பெரிய ஆபத்தாக கருதி, அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் செய்வர்.
அதில் முடிவுகள் நெகட்டிவ் ஆக இருந்தால் மகிழ்ச்சி வராது. அலோபதி, சித்தா, ஆயுர்வேதம் தொடங்கி, நாட்டு மருத்துவம் வரை அடிக்கடி மருந்துகள் எடுத்துக் கொள்வர்.
இவர்களுக்கு உளவியல் சிகிச்சை மட்டுமே தீர்வு என டாக்டர்கள் கூறுகின்றனர்.
இப்பாதிப்புக்குள்ளான முதியோரை, வீட்டில் இருப்பவர்கள் அரவணைப்பதும், ஆறுதலாக நடந்து கொள்வதும் அவசியம்.