காலை கவலைக்கு காரணங்களும், தீர்வுகளும் !
கார்டிசோல் ஒரு மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் ஆகும்.மேலும் இது காலையில் அதிகமாக இருப்பதால், அது கவலை அறிகுறிகளை மோசமாக்கும்.
உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை கடைப்பிடியுங்கள். காலை உணவை தவறவிட வேண்டாம்.
முந்தைய நாளின் மன அழுத்தங்கள், தீர்க்கப்படாத மோதல் போன்றவை காலை கவலையையும் மோசமாக்கும்.
கடந்த காலம், எதிர்காலத்தை எண்ணி கொண்டிருக்காமல், நிகழ்காலத்தை மன நிறைவுடன் வாழ பழகுங்கள்.
வேலை அல்லது பள்ளிக்கு தாமதமாக செல்வதை பற்றி கவலைப்படுவது மற்றும் பிற மன அழுத்தம் நிறைந்த காலை நடைமுறைகளும் கவலையை அதிகரிக்கலாம்.
எனவே, அலாரம் வைத்து, நேரம் குறித்த விழிப்புணர்வுடன், எதையும் முன்கூட்டியே திட்டமிடுங்கள்.
மோசமான தூக்கம் அல்லது தூக்கமின்மை கவலையை துரிதப்படுத்தும். எனவே குறைந்தபட்சம் 8 மணி நேரம் தூங்குவதை உறுதிப்படுத்தவும். தூங்கும் முன் டிவி, ஸ்மார்ட்போன் பார்ப்பதை தவிர்க்கவும்.
கவலையுடன் இருப்பவர்கள், மற்றவர்களுடன் சகஜமாக பழக முடியாமல் பதட்டத்தில் தவிப்பர். நண்பர்களிடமோ, நம்பிக்கையானவர்களிடமோ மனம் விட்டு பேசுங்கள்.
நம்பிக்கையுடன் ஒவ்வொரு நாளையும் துவங்குங்கள்.