கண் வறட்சி ஏற்படுவது ஏன்?

தற்போது வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோருக்கும் கண் வறட்சி ஏற்படுகிறது. கண்ணில் போதிய ஈரத்தன்மை இல்லாததால் இது ஏற்படும்.

இதனால் கண் ஒட்டியிருப்பது போன்ற உணர்வு, கண் எரிச்சல், கண் வலி, கண்ணை திறக்க சிரமம், தலைவலி ஏற்படுகிறது.

சிறிய அளவில் ஏற்படும் கண் வறட்சியை கவனிக்காவிட்டால் பின் அதிகமாகி வேறு பல விளைவுகளை ஏற்படுத்தும்.

வாதநோய் உள்ளவர்களுக்கும் கண் வறட்சி ஏற்படும். எதற்காக கண் வறட்சி ஏற்படுகிறது என்பதை முதலில் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை பெற வேண்டும்.

கண்ணிற்கு குளிர்ச்சி, குளுமை அவசியம். தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிப்பதோடு உணவில் நெய்யை சேர்க்க வேண்டும்.

கீரைகள், நார்ச்சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். மசாலா உணவு, பொரித்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. கண்ணிற்கு வெளியே நெய், ஆமணக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும்.

மது அருந்துபவர்கள், அதிகநேரம் ஏசியில் இருப்பவர்கள், போதிய துாக்கம் இல்லாதவர்களுக்கு கண்ணில் சூடு ஏற்பட்டு வறட்சி ஏற்படும். அதற்கு கால் உள் பாதம், உள்ளங்கையில் நெய் தடவலாம்.

ஏசியில் இருக்கும் போது உடலின் ஈரத்தன்மை குறைகிறது. எனவே சிறிது நேரம் ஏசியை தவிர்த்து காற்றோட்டமான இடத்தில் அமர்வது நல்லது.