டார்க் சாக்லேட் பிரியரா? உங்கள் சாக்லேட்டில் நச்சுப் பொருட்கள் இருக்க வாய்ப்பு
சிறுவர், பெரியவர் என வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் பிடித்த ஒன்று சாக்லேட். அதில், டார்க் சாக்லேட் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்றே பெரும்பாலான ஆய்வுகள் கூறியது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது 'டார்க் சாக்லேட்களில் 2 வகையான நச்சு பொருட்கள் உள்ளன. அவை நுரையீரல், நினைவுப் பிரச்னை, கேன்சர் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துவதாக புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கைச் சேர்ந்த கன்ஸ்யூமர் ரிப்போர்ட்ஸ் ஹெர்ஷே, லின்டிட், டோனியின் சாக்கோலோன்லி உள்ளிட்ட பிரபலமான 28 டார்க் சாக்லேட் பார்களை ஆய்வுக்கு உட்படுத்தியது.
அந்த ஆய்வின் முடிவில், அனைத்து டார்க் சாக்லேட்டிலும் காட்மியம், ஈயம் ஆகிய 2 நச்சு உலோகங்கள் உள்ளன என தெரியவந்துள்ளது. அவை பலவித உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துமாம்.
பரிசோதிக்கப்பட்ட 28 சாக்லேட்டுகளில், 23ல் ஈயம் அளவுகள் இதை விட இரண்டரை மடங்கு அதிகமாகவும், காட்மியம் அளவு மூன்று மடங்கு அதிகமாகவும் இருந்தது.
இதனால் நினைவாற்றல் இழப்பு, வயிற்று வலி, புற்றுநோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்த உலோகத்தின் அதிக செறிவுகள் குழந்தைகளின் மூளை, நரம்புகளில் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.
குழந்தைகளின் கற்றல், நடத்தல் திறன்கள் பாதிக்கப்படுகின்றன. காட்மியத்தின் குறைந்த அளவு உடலில் சேர்ந்தால் கூட சிறுநீரக புற்றுநோய் ஏற்படவும், எலும்புகள் வலுவிழக்கவும் வாய்ப்புள்ளது.
காட்மியம் மற்றும் ஈயம் அதிகம் உள்ள சாக்லேட்டுகள் உடனடியாக தீங்கு விளைவிக்க வாய்ப்பில்லை; நீண்ட காலத்திற்கு பிறகுதான் இதன் விளைவுகள் தெரியும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நச்சு உலோகங்கள் மீண்டும் மீண்டும் உடலில் சேர்வதால் மக்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என ஆய்வு முடிவில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
சாக்லேட் நிறுவனங்கள் நினைத்தால், தயாரிப்புகளில் இந்த உலோகங்களின் அளவு குறைவாக இருக்க வாய்ப்புள்ளது எனவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.