இன்று உலக தியான தினம்!

தியானத்தின் நன்மைகள் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் டிச. 21ல் உலக தியான தினம் கொண்டாடப்படுகிறது.

உடல், உயிர், மனம் மூன்றையும் இணைத்து அமைதி பெறுவதற்கான செயல் முறையே தியானம்.

பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், அனைத்து தரப்பு மக்களுக்கும், குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு தியானப் பயிற்சி அவசியம். 

மன அமைதியும், நிம்மதியும் தியானத்தால் பெற முடியும். பொறுமையான மனம் இருந்தால் உடல் ஒத்துழைக்கும்.

மனஅழுத்தத்தால் மனம் குழம்புகிறது. அதனால், பல உடல் உபாதைகள் ஏற்படுகிறது. தியானம் செய்வதால் மனம் குழம்பாமல் தெளிவாகும்.

ஒவ்வொரு எண்ணத்திற்கு நடுவில் சிறிய இடைவெளி வரும். அது சூன்யம், ஒன்றுமில்லா தன்மை, மனமற்ற நிலை எனப்படும்.

தொடர்ந்து பயிற்சி செய்ய, எண்ணங்களிலிருந்து விலகி, உடலுக்கும் மனதுக்குமான இடைவெளியை உணர்வோம்.