ஆஸ்கர் விழாவில் அசத்தப்போகும் தீபிகா
பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே திருமணத்துக்கு பிறகும் பிசியாக உள்ள நிலையில், ஷாருக்கானுடன் பதான் படத்தில் நடித்தார்.
இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை புரிந்தது. இதன் காரணமாக தற்போது தீபிகா படுகோனே பாலிவுட்டில் மேலும் பல புதிய படங்களில் கமிட்டாகி வருகிறார்.
இந்நிலையில் மார்ச் 12ம் தேதி அமெரிக்காவில் நடக்கவுள்ள ஆஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்கவிருக்கும் பிரபலங்களின் பட்டியலில் தீபிகாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.
விருது அறிவித்து, வழங்க உள்ள இந்த தொகுப்பாளர் பட்டியலில் மொத்தம் 16 பேர் இடம் பெறுகிறார்கள். அவர்களில் ஹாலிவுட் நடிகர்கள் டுவைன் ஜான்சன் உள்ளிட்டோரும் அடக்கம்.
இதையடுத்து தீபிகாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தீபிகாவின் கணவர் ரன்வீர் சிங்கும் வாழ்த்து தெரிவித்து இமோஜி பதிவிட்டுள்ளார்.