செரிமான கோளாறு அறிகுறிகள் அல்சராகவோ.. கேன்சராகவும் மாறலாம்!
'ஹெச் பைலோரே அல்சர்' எனப்படும் குடல் புண் ஏற்பட பொதுவான காரணம், ஹெச் பைலோரே என்ற பாக்டீரியா.
இது அசுத்தமான உணவு, குடிநீர் வாயிலாக பரவக்கூடியது. இந்த தொற்று பாதிக்கப்பட்டதும் அறிகுறிகள் தெரியாது;
உடலுக்குள் சென்று நிதானமாக வளர்ந்து, 5 - 10 ஆண்டுகள் கழித்தே அறி குறிகளை வெளிப்படுத்தும். முதலில் வாயு தொல்லையை ஏற்படுத்தும்; அதன்பின் குடல் புண் அல்சரை உண்டாக்கும்.
பாக்டீரியா தொற்றை ஆரம்பத்தில் கண்டறிந்தால், மருந்துகள் தந்து சரி செய்யலாம்.
அல்சர் பாதிக்கப்பட்ட இடத்தில் பயாப்சி (சிறிதளவு சதை எடுத்து), ஆர்யூடி ரேபிட் யூரியேசி டெஸ்டில் இதை உறுதி செய்யலாம்.
முறையாக சிகிச்சை செய்யாமல், 20 ஆண்டுகளுக்கு மேல் அப்படியே விட்டால், கேன்சராக மாற வாய்ப்பு உண்டு.
சிகரெட், மது, நீண்ட நாட்கள் வலி நிவாரணிகள் சாப்பிடுவது, அல்சர் அறிகுறிகளை அதிகப்படுத்தும்.
சுகாதாரமான உணவு, குடிநீர் மட்டுமே இத்தொற்று பாதிக்காமல் தடுக்கும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.