நாக்கில் அடிக்கடி புண் ஏற்படுகிறதா? தீர்வுகள் சில..

தினமும் பற்கள், நாக்கை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பது, சாப்பிடும் போதோ அல்லது பல் துலக்கும் போதோ நாக்கை கடித்து காயப்படுத்துவதால் புண் ஏற்படலாம்.

பூஞ்சை தொற்று, ஊட்டச்சத்து குறைபாடு (இரும்பு, பி12, போலேட், துத்தநாகம்), மன அழுத்தம், மாதவிடாய், சிட்ரஸ், சாக்லேட், காபி போன்ற உணவு வகைகள் எடுத்துக்கொண்டாலும் புண் உருவாகலாம்.

பெஹ்செட்ஸ் நோய், ஐ.பி.டி., செலியாக் நோய், எச்.ஐ.வி. பாதிப்பும் காரணமாக இருக்கலாம்.

உணவு ஒவ்வாமை, புற்றுநோய் உட்பட பல வாய்ப்புகள் இருக்கின்றன. டாக்டரிடம் பரிசோதனை செய்ய வேண்டும்.

வைரஸ் தொற்றால் சளி, இருமல் ஏற்படுகிறது. பாக்டீரியா தொற்றுகளால் மூச்சுக்குழாய் அழற்சி, காசநோய், நிமோனியா பாதிப்பும் ஏற்படலாம்.

பூஞ்சைத் தொற்று, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தாலும் பருவகால மாற்றம், சுற்றுச்சூழல் துாசு, புகை, மாசுபாடு காரணிகளாலும் சளி பிடிப்பதற்கான வாய்ப்பு அதிகம்.

ஒவ்வாமை எதிர்ப்பு மருந்துகள், நாசில் ஸ்ப்ரே, இன்ஹேலர், மூச்சுக்குழாய் விரிவிகளால் சரிசெய்யலாம்.

இதை சுவாச செயல்பாட்டு சோதனை மூலம் கண்டுபிடித்து தவிர்க்கலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.