சிகரெட் புகைப்பதால் பெண்களுக்கு உண்டாகும் பாதிப்புகள்

சமீபத்திய ஆய்வில், 14 வயதிலேயே பெண் குழந்தைகளும், ஆண் குழந்தைகள் 18 வயதிலும் சிகரெட் புகைக்கும் பழக்கத்தை துவக்கி விடுவதாக கூறப்பட்டுள்ளது.

நம் நாட்டிலும் நகர்ப்புறங்களில் டீன் ஏஜ் பெண் குழந்தைகள் சிகரெட் பழக்கத்திற்கு ஆளாவது சமீப ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இது மட்டுமின்றி, எல்லா வகை புகையிலை பொருட்களும் பயன்படுத்துகின்றனர்.

சிகரெட் பழக்கம் இல்லாத 25 சதவீதம் பெண் குழந்தைகள், வீட்டில் மற்றவர்கள் சிகரெட் பிடிக்கும் போது புகையால் பாதிக்கப்படுகின்றனர்.

புகையிலை பொருட்களால் வாய் கேன்சர் பாதிப்பு அபாயம் அதிகம் என்றாலும், பெண் குழந்தைகள் இப்பழக்கத்தில் ஈடுபடும் போது, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பு குறையும்.

இதனால், மாதவிடாய் தொடர்பான பல பிரச்னைகள் வரலாம். குழந்தை பெறும் வயதில் மலட்டுத்தன்மை ஏற்படும்; கர்ப்பப்பை வாய் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கர்ப்பம் தரித்தாலும் இயல்பான வளர்ச்சி குழந்தைக்கு இருக்காது. இது தவிர, குறை பிரசவம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்; கருச்சிதைவு அபாயமும் உள்ளது.