அயோடின் சத்து குறைவால் கர்ப்பிணிகளுக்கு உண்டாகும் பாதிப்புகள்

அயோடின் நம் உடலுக்கு கிடைக்க வேண்டிய முக்கிய சத்தாகும். தினசரி 150 மைக்ரோ கிராம் அளவு அயோடின் கட்டாயமாக தேவைப்படுகிறது.

அயோடின் என்பது உடலிலுள்ள தைராய்டு சுரப்பி சரியான அளவில் தைராய்டு ஹார்மோனை சுரப்பதற்கு இன்றியமையாத தேவையாக உள்ளது.

தைராக்சின் சுரப்பு போதிளவில் இல்லாவிட்டால் தைராய்டு சுரப்பி வீக்கம் கண்டு முன் கழுத்துப் கழலை நோய் ஏற்படும்.

கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு பாலூட்டும் பெண்களுக்கு இன்னும் அதிகளவில் தேவைப்படுகிறது.

கர்ப்ப காலத்திலும், கர்ப்பமடைவதற்கு முன்னும் அயோடின் சத்து சரிவர கிடைக்காவிட்டால், கருப்பையில் வளரும் குழந்தைக்கு மூளை வளர்ச்சிக் குறைபாடு ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது.

பிறக்கும் குழந்தைக்கு பேச்சு வராமை, காது கேளாமை, மாறு கண் பிரச்னை என பல பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் தைராய்டு சுரப்பு குறைவாக இருந்தால் பிறக்கும் குழந்தைக்கும் ஹைப்போ தைராய்டிசம் ஏற்படும்.

இதனால் குழந்தை, வளர்ச்சிக் குறைபாடுடனும் மனநலம் குன்றியும் வளரக்கூடிய வாய்ப்புள்ளது.