ஆபத்துக்கு வழிவகுக்கும் அதிக சத்தம்
எல்லா நேரமும் ஏதோ ஒரு சத்தம் நம் காதில் விழுந்து கொண்டே உள்ளது.
இதுபோன்று
தொடர்ச்சியாக ஏற்படும் அதிக சத்தத்தின் காரணமாக, நம் உள்காதில் உள்ள
மென்மையான உறுப்புகள் சேதமடைந்து, நிரந்தரமாக கேட்கும் திறனை இழக்கச்
செய்யலாம்.
இதனால், இளம் வயதிலேயே 'ஹியரிங் எய்ட்' பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
50 டெசிபல் ஒலிக்கு மேல் கேட்க வேண்டாம் என சமீபத்தில் அரசு அறிவுறுத்தியுள்ளது. மின் சாதனங்களின் ஒலி அளவை 50 - 60 % வரை மட்டுமே வைத்தால் இந்த அளவை கடைப்பிடிக்க முடியும்.
சத்த அளவை குறைவாக அளிக்கும் ஹெட்போன்களையும் பயன்படுத்தலாம்; இது, சுற்றுச்சூழலில் ஏற்படும் சத்தங்களை குறைக்க உதவும்.
குழந்தைகள்
பார்க்கும் வீடியோக்களும், விளையாட்டுகளும் அதிக சத்தம் நிறைந்தவையாக
உள்ளதால், அவர்களின் காதுகள் வெகுவாக பாதிக்கப்படக்கூடும்.
இவற்றை தவிர்க்க, தினமும் 2 மணி நேரம் மட்டுமே மொபைல் போன் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
பொது நிகழ்ச்சிகள், திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகள்,
திருவிழாக்களில் ஒலிபெருக்கி அருகே ஒரு மணி நேரம் அமர்ந்திருப்பது, நிரந்தர
காது கேளாமையை ஏற்படுத்தும்.
அதிக ஒலி, செவித்திறனை மட்டும் பாதிக்காது; மற்றவர்கள் பேசும் எந்த விஷயத்தையும் புரிந்து கொள்வதிலும் சிக்கலை ஏற்படுத்தலாம்.