மூளை வளர்ச்சிக்கு ஏற்ற உடற்பயிற்சிகள்!

காலையில் முதல் வேலையாக நடைபயிற்சி, ரன்னிங், ஜாகிங், நீச்சல் என்று ஏதோ ஒன்றை 40 நிமிடங்கள் செய்தால், அன்று முழுதும் உற்சாகமாக இருப்பதை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நாம் உணர்ந்திருப்போம்.

மூளையின், 'நியூரோ ஜெனிசிஸ்' என்ற பகுதிகளில் புதிய புதிய நரம்பு செல்கள் உருவாகின்றன. அப்படி ஒரு பகுதி தான், 'ஹிப்போ கேம்பஸ்'. இந்த பகுதியில் தான் நினைவாற்றல் உருவாகி, பாதுகாக்கப்படுகிறது.

உடற்பயிற்சி செய்யும் போது, இந்தப் பகுதியில் புதிய நரம்பு செல்கள் உருவாகின்றன.

அதிலும், 'பிளாஸ்டிசிட்டி' எனப்படும் நரம்பு செல்களுக்கு இடையிலான தொடர்புகள் அதிகரிக்கின்றன.

எட்டு வயதில் துவங்கி 80 வயது வரை உடற்பயிற்சி மூளை வளர்ச்சிக்கு பெருமளவு உதவுவது, பல ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

இது தவிர, மன அழுத்தம், 'அல்சைமர்ஸ், பார்க்கின்சன்ஸ்' போன்ற மூளை தொடர்பான நோய்கள் வராமலும் பாதுகாக்கிறது.

மிதமான உடற்பயிற்சி செய்யும் இளம் வயதினர், தினமும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் வாரத்தில் 5 நாட்களும், தீவிர உடற்பயிற்சி செய்பவர்கள், தினமும் 20 நிமிடங்கள் வாரத்தில் குறைந்தது 3 நாட்களாவது செய்ய வேண்டும்.