சோம்பு நீரில் இத்தனை நன்மைகளா... ஒரு கிளாஸ் போதும்!

சோம்பு விதைகள் லேசான இனிப்பு சுவையுடன் இருக்கும். மேலும் வாசமாக இருப்பதால் வாய் புத்துணர்ச்சிக்காக கூட பயன்படுத்துகின்றனர்.

சோம்பு பாலிபினால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இதுனால் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன.

தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக சோம்பு தண்ணீரை குடித்து வந்தால் மூளை நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.

உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்து, கலோரிகள் மற்றும் கொழுப்புக்களைக் குறைத்து உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வருகிறது.

மெட்டாமெலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.

ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, சுத்தப்படுத்துகிறது. மேலும் உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்றும்

ஆஸ்துமா, வயிற்று வாயு மற்றும் நெரிசல் உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகளை போக்கும் திறன் இவற்றில் உள்ளது.

மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அடிவயிற்றுவலியை நீக்கும்.