கோட் விசில் போடு பாடல்... சர்ச்சையில் சிக்கும் விஜய் பாடல்…
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் படத்தின் விசில் போடு என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இசையில் விஜய்யே அந்த பாடலை பாடி இருப்பதால் அவரது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ளது.
24 மணிநேரத்திற்குள்ளேயே 21 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
'பார்டி ஒன்னு தொடங்கட்டுமா' என தொடங்கும் இப்பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். மதன் கார்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார்.
விஜய், பிரபுதேவா, பிரசாந்த் இணைந்து நடனமாடும் காட்சிகளை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த பாடல் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், மது பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் இருப்பதாக ஆன்லைன் மூலம் டிஜிபி அலுவலகத்தில் ஒருவர் புகார் அளிக்கிறார்.
குடிமகன் தான் நம் கூட்டணி, இரத்தம் பத்தட்டும் விசில் போடு ஹே நண்பா நண்பி விசில் போடு என்று இளைஞர்கள் மத்தியில் வெறியை தூண்டும் வகையில் அந்த பாடல் வரிகள் இடம்பெற்றுகிறது என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே விஜய் நடித்த லியோ படத்தில் கூட மதுவை ஆதரித்து பாடல் இடம்பெற்றிருந்தது.
விஜய்யின் இது போன்ற செயற்பாடு நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.