கோடைக்கு இதமான நுங்கின் ஆரோக்கிய நன்மைகள்!
கொளுத்தும் கோடை வெயிலில் உடலுக்கு இதமளிக்கும் உணவுகளில் ஒன்றாக நுங்கு உள்ளது.
நுங்கில், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
இதில், கலோரிகள் குறைவாக உள்ளதால், ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கலாம்.
வயிறு மற்றும் செரிமானப் பிரச்னைகளுக்கு இயற்கையான மருந்தாக நுங்கு உள்ளது. மலச்சிக்கலைப் தவிர்க்கவும் உதவுகிறது.
சோடியம், பொட்டாசியம், மினரல்கள் நிறைந்திருப்பதால் உடலில் நீர்சத்தை பராமரிக்க உதவுகிறது.
கார்போஹைட்ரேட் உடலில் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கக் கூடியது. நுங்கில் அது குறைவாக இருப்பதால், நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் தாராளமாக இதை சாப்பிடலாம்.
நுங்கில் பொட்டாசியம் இருப்பதால் சிறுநீரகப் பிரச்னைகள் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். மற்றவர்களுக்கு நுங்கில் உள்ள பொட்டாசியம், உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.