ஒரு சிட்டிகை பெருங்காயம் உண்டால் இத்தனை பயன்களா!!
பெருங்காயத்தை உணவில் சேர்ப்பதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கும். குறிப்பாக வெங்காயம், பூண்டில் உள்ள மருத்துவ குணங்கள் இதிலும் உள்ளது.
செரிமான பிரச்சனைகளில் உடனடி நிவாரணம் கிடைக்க சிறிது பெருங்காயத்தை தண்ணீர் அல்லது மோரில் கரைத்து குடித்தால் சரியாகும்.
மாதவிடாய் பிரச்னை, சினைப்பை நீர்க்கட்டி உள்ள பெண்களும் பெருங்காயத்தை உணவில் அவ்வப்போது சேர்த்துக்கொண்டே வருவது நல்லது.
பிரசவத்துக்குப் பின் வயற்றில் உள்ள நஞ்சுகளை வெளியேற்ற, பெருங்காயத்தைப் பொரித்து, வெள்ளைப் பூண்டு, பனை வெல்லம் ஆகியவற்றை சேர்த்து காலை வேளையில் சாப்பிடலாம்.
இதில் உள்ள வைரஸ் மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் இருமல், மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா, சளி உள்ள சுவாச பிரச்னைகளை சீர்செய்யும்.
பெருங்காயப் பொடியை ஒரு கடாயில் மிதமான தீயில் வறுத்து, சொத்தைப் பல்லின் குழியில் வைத்து கடித்துக் கொண்டால் பல் வலி குணமாகும்.
மார்பகம், நுரையீரல், குடல் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை இது தடுப்பதாக ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
பெருங்காயத்தை நாள்தோறும் நம் உணவில் 125 முதல் 500 மி.கி. மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கூறப்படுகிறது.