லவங்கப்பட்டை தேன் சேர்ந்தால் இத்தனை பயன்களா…
லவங்கப் பவுடர் - இரண்டு மேஜைக்கரண்டி எடுத்து, தேன் கலந்து, சாப்பிடுவதற்கு முன் உட்கொண்டால், கடின உணவும் ஜீரணமாகிவிடும்.
சூடான தேன் - ஒரு மேஜைக்கரண்டி, லவங்க பவுடர் - நான்கு தேக்கரண்டி கலந்து, காலை, மாலை என, மூன்று நாட்களுக்கு சாப்பிட்டால், சளி, இருமல் மற்றும் சைனஸ் தொல்லைகள் அகலும்.
லவங்க பவுடர் - ஒரு சிட்டிகை, தேன் - அரை தேக்கரண்டி கலந்து, பல் ஈறுகளில் பூசினால், அது உமிழ்நீருடன் உட்சென்று, மலட்டு தன்மையை நீக்குவதாக கூறப்படுகிறது.
வயிற்று வலி, அல்சர், வாயு பிரச்னை ஆகியவற்றிற்கு தேன், லவங்கப்பட்டை பவுடர் உட்கொண்டால் குணம் பெறலாம்.
லவங்க பவுடர், தேன் - தலா ஒரு தேக்கரண்டி கலந்து, பல் வலி உள்ள இடத்தில் தினமும் மூன்று வேளை பூசினால், வலி நீங்கி விடும்.
லவங்க பவுடரை, தேனுடன் கலந்து தினமும் காலை, மாலையில் சாப்பிட்டால், உடலில் சக்தி கூடும்.