இளம் வயதினரிடையே மாரடைப்பு: 10 நிமிட விறுவிறு வாக்கிங் அதிசயத்தை உண்டாக்கும்.
ஒரு நாளைக்கு 10 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி மேற்கொண்டால் இதய நோய், பக்கவாதம் மற்றும் பல புற்றுநோய்களின் அபாயம் குறையுமாம்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் தலைமையிலான புதிய ஆராய்ச்சி, பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசினில் வெளியாகியுள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட உடலியல் செயல்பாடுகளில் பாதியையாவது செய்து வந்தால், இளமைக் கால மரணங்களில் காப்பாற்ற முடியும் என தெரிவித்துள்ளனர்.
உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வாரத்திற்கு150 நிமிட மிதமான ஏரோபிக் உடற்பயிற்சி அல்லது 75 நிமிட தீவிரமான ஏரோபிக் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
ஏரோபிக் உடற்பயிற்சிகள் இதய ரத்த நாளங்களை சீரமைக்க உதவுவதோடு இதயத் துடிப்பை உயர்த்தி, நம்மை வேகமாக சுவாசிக்கச் வைக்கும்.
வாரத்திற்கு 75 நிமிடங்கள் நடப்பவர்கள், நீந்துபவர்கள், ஓடுபவர்களிடையே இதய நோய் உருவாகும் ஆபத்தை 17% குறைக்கிறது என ஆய்வுகள் கூறுகின்றன.
அதன்படி, நுரையீரல், கல்லீரல், எண்டோமெட்ரியல், பெருங்குடல் மற்றும் மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்து 3-11% குறைந்துள்ளது.