'தாத்தா'க்களை வில்லன்களாக்கும் உலக சினிமா..! காரணம் என்ன?
உலகம் முழுக்க உள்ள நெட்ஃபிளிக்ஸ் வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பு பெற்ற, 'ஸ்குவிட் கேம்' டிராமா சீரீஸ் காண்போரை கதிகலங்கச் செய்யும்.
ஹாரர் கலந்த காட்சிகள் கொண்டிருந்தாலும், அடித்தட்டு மக்கள் மீதான முதலாளித்துவத்தின் உலகளாவிய ஆதிக்கத்தை உணர்த்தியது இந்த வெப் சீரீஸ்.
'பச்சை-னா சென்றிடு....சிவப்புன்னா நின்றிடு', என்று பத்து வயது சிறுமி குரலில் குழந்தைகள் விளையாடும் 'ரெட் லைட், கிரீன் லைட்' என்கிற விளையாட்டு துவங்கும்.
இதில் வில்லனான, தாத்தா கதாப்பாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய, நடிகர் 'ஓ யோங்' சூ, தென் கொரியாவில் இருந்து முதன் முறையாக கோல்டன் குளோப் விருது பெற்றார்.
இதேபோல ஹாலிவுட்டில் சா ஃபிரான்ஸைஸ் திகில் படங்கள் கடந்த 2000-களில் மிகப் பிரபலமாக இருந்தன.
இதில் டோபின் பெல் என்கிற 75 வயதான மூத்த ஹாலிவுட் நடிகர், ஜான் கிராமர்/ ஜிக்ஸா கில்லர் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இதேபோல அவதார் பட சீரீஸ் வில்லனாக நடித்துப் புகழ்பெற்ற ஸ்டீஃபன் லாங், 'டோன்ட் ஃப்ரீத்' படத்தின் ஆன்டி ஹீரோவாக மிரட்டியிருப்பார்.
உலகம் முழுக்க உள்ள கதாசிரியர்கள், இயக்குநர்கள் பலர், மூத்த நடிகர்கர்களை தங்கள் கதைகளுக்கு வில்லன்களாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
பல ஆண்டுகளாக நடித்து அனுபவம் பெற்று உயர்ந்த மூத்த நடிகர்கள்போல, வில்லனின் குணாதிசயங்களை இயல்பாக வெளிப்படுத்த முடியும் என்பது தான்.
இதனாலேயே மெகா பட்ஜெட் ஹாலிவுட் சினிமாக்கள் முதல் ஓடிடி வெப் சீரீஸ் வரை எல்லாவற்றிலும் மூத்த நடிகர்கள் வில்லன்களாகப் பயன்படுத்தப் படுகின்றனர்.