காது, மூக்கு, தொண்டையை எப்படி பராமரிப்பது?
மனித உடலில் காது மூக்கு தொண்டை மிகவும் முக்கிய பகுதி. இவை சுலபமாக சுற்றுப்புற சூழல் காரணமாக நோய் தொற்றால் பாதிப்படைய வாய்ப்புள்ளது.
முதலில் தொற்று பரவும் காலக்கட்டத்தில் சுகாதாரமற்ற உணவுகளை வாங்கி உண்பதை தவிர்க்க வேண்டும்.
காது மூக்கு தொண்டை பகுதியில் ஏதாவது தவறுதலாக சிறு பொருட்கள் உள்ளே சென்று விட்டால் அதை வீட்டில் எடுக்க முயற்சிக்க வேண்டாம். டாக்டரின் ஆலோசனைப்படி தான் எடுக்க வேண்டும்.
டாக்டரின் ஆலோசனை இல்லாமல் காதில் சொட்டு மருந்து ஊற்றுவதை தவிர்க்க வேண்டும்.
தேவையில்லாமல் காதில் பஞ்சு வைத்தோ அல்லது குச்சி வைத்தோ சுத்தம் செய்ய வேண்டாம்.
அதேபோல் காதில் அதிகமான அதிர்வலைகளை ஏற்படுத்தும் ஹெட்போன் பயன்படுத்த வேண்டாம்.
தொண்டையில் வலி ஏற்பட்டாலோ புண் இருந்தால் வீட்டு வைத்தியம் சுய வைத்தியம் செய்யாமல் டாக்டரின் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டும்.
அதிகமான கூட்ட நெரிசலில் செல்லும் போதும் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும்போதும் முகக்கவசம் அணிய வேண்டும்.
கை கால்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும். நம் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள ஒரு முறைக்கு இருமுறை காலை மாலையில் குளிப்பதோடு நம் வீட்டின் சுற்றுப்புறத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.