சின்னம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி?
சின்னம்மை எனும் சிக்கன்பாக்ஸ் வெயில்காலத்தில் பரவும் வைரஸ் தொற்று. குழந்தைகள், சிறுவர், சிறுமியர் பாதிப்புக்குள்ளாவர்.
ஒருமுறை தொற்று வந்தால் உடலில் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி பெறப்படுவதால் மீண்டும் சின்னம்மை வராமல் தடுக்கப்படுகிறது.
ஒரு சிலருக்கு குழந்தைப் பருவத்தில் சின்னம்மை வந்தாலும் வளரிளம் பருவத்தில் அல்லது முதுமையிலும் தொற்று ஏற்படலாம்.
பெரும்பாலும் அச்சறுத்தல் தராத சாதாரண நோயாகக் கடந்து செல்லும்.
ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள், எடை குறைவான, ஊட்டச்சத்து குறைவான குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோர், முதியோருக்கு தீவிரத்துடன் தொற்று பரவலாம்.
இதர வைரஸ் காய்ச்சல் போல இரண்டு நாட்கள் கடுமையான காய்ச்சலுடன் ஆரம்பிக்கும்.
இதர வைரஸ் காய்ச்சல் போல இரண்டு நாட்கள் கடுமையான காய்ச்சலுடன் ஆரம்பிக்கும். அதன்பின் நெஞ்சு, முதுகு, முகம் எனத் தொடங்கி உடலின் அனைத்துப் பகுதியிலும் கொப்புளம் உருவாகும்.
ஏழு முதல் பத்து நாட்களுக்குள் கொப்புளம் சருகாகி விழுந்துவிடும். இந்த காலக்கட்டத்தில் பாதிப்புக்குள்ளானோர் இருமும் போது, தும்மும் போது அருகில் உள்ளவர்களுக்கு எளிதில் பரவும்.
எனவே நோய் தாக்கினால் தனிமையில் இருக்க வேண்டும். சின்னம்மை வந்தால் டாக்டரிடம் சிகிச்சை பெறுவதே நல்லது.
சின்னம்மைக்கு எதிரான தடுப்பூசி உள்ளது. விருப்பத்தின் பேரில் செலுத்திக் கொள்ளலாம்.