பொட்டாசியம் அளவு குறைவதால் வரும் பாதிப்புகள் என்னென்ன?
பொட்டாசியம் என்பது நமது நரம்புகள் மற்றும் தசைகளின் சரியான செயல்பாட்டிற்கு அவசியமான ஒரு கனிமமாகும்.
இது உடலில் உள்ள செல்களில் மின் செயல்பாட்டைப் பராமரிக்கிறது. குறிப்பாக இந்த அளவு குறையும் போது, நரம்புகள், தசைகள் மற்றும் இதயத்தில் உள்ள செல்களைப் பாதிக்கிறது.
பொட்டாசியம் அளவுகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் குமட்டல், தசைப்பிடிப்பு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சீரற்ற இதயத் துடிப்பு, குறைந்த ரத்த அழுத்தம், நீரிழப்பு, பலவீனம் போன்ற அறிகுறி உண்டாகும்.
பொட்டாசியம் குறைபாடு என்பது 3.6 மிமீல்/லிட்டருக்கும் குறைவான அளவுகளால் வகைப்படுத்தப்படுகிறது. ஹைபோகாலேமியா என்றும் அழைக்கப்படுகிறது.
உணவில் பொட்டாசியம் பொதுமான அளவு இருக்க வேண்டும். இது சோடியத்தின் அளவை கட்டுக்குள் வைத்து, ரத்த அழுத்தத்தை சீராக்கும்.
பழங்கள், பச்சை காய்கறிகள், தானியங்கள் அதிகமாக சாப்பிடும் போது, அதிகமான பொட்டாசியம் கிடைக்கும். தர்ப்பூசணி, கிர்ணி, வாழைப்பழம், அவகாடோ, ஆரஞ்சில் அதிகமாக உள்ளது.
மேலும் அவசியம் ஏற்பட்டால் டாக்டர்களில் பரிந்துரைப்படி பொட்டாசியம் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக்கொள்ளலாம்.