துருவ நாடுகளின் சுற்றுலாப் பயணிகளை கவரும் பனி எரிமலைகள்..!
எரிமலைகள் குறித்து நாம் நிறைய படித்திருப்போம். இந்தோனேசியாவின் சுமத்ரா, ஜாவா தீவுகளில் கெலவோயா உள்ளிட்ட பல ஆக்ரோஷ எரிமலைகள் இன்னும் கொதித்து வருகின்றன.
எரிமலைகள் ஒருபுறம் ஆக்ரோஷமாக ஆரஞ்சு நிற குழம்பைக் கொட்டி அச்சுறுத்தும் நிலையில் மறுபக்கம் துருவப் பகுதிகளில் பனி எரிமலைகள் குளிர்ச்சியான பனியைக் கொட்டுகின்றன.
பனி எரிமலைகள் ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதிகளில் அமைந்துள்ளன. இவை பனி படர்ந்த கடற்பகுதிகளுக்கு அருகே அமைந்திருக்கும்.
ஆர்க்டிக், அண்டார்டிக் கடல் பரப்பை ஒட்டிய பனி மலைகளின் பலவீனமான பகுதிகளை, கடல் அலைகள் தாக்குவதால் பனிமலைகள் இடையே விரிசல் உண்டாகி பிரம்மாண்ட பள்ளமாக மாறும்.
இப்பகுதியில் கடல் அலை தொடர்ந்து அடித்து வருவதால் கடற்கரையின் அடியில் இருக்கும் பனிக்குவியல் மலையின் உச்சியைத் தாண்டி மேலே தூக்கியடிக்கப்படும்.
இது பார்க்க பனியால் ஆன எரிமலை போலக் காட்சியளிக்கும். மணல் போன்ற மிருதுவான பனி, பல மீட்டருக்கு தொடர்ந்து கடல் அலைகளால் மேலே தூக்கியடிக்கப்படும்.
இந்தப் பனிமழையில் நனைய சுற்றுலாப் பயணிகள் அதீத ஆர்வம் காட்டுவர்.
இதேபோல நமது சூரிய குடும்பத்தில் ப்ளூட்டோ டுவார்ஃப் கிரகத்தில் பனி எரிமலைகள் அதிகளவில் உள்ளன.