முன்னோர்களுக்கு ஹார்ட் அட்டாக் பாதிப்பு இருந்தால் வாரிசுகளுக்கும் வருமா? தீர்வென்ன?
தாத்தாவுக்கும், தந்தைக்கும் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது என்றால், மகன் அல்லது மகளுக்கும் பாதிப்பு வர வாய்ப்புகள் உள்ளன.
அதை தவிர்க்க ரத்த அழுத்தம், நீரிழிவு, லிப்பிட் புரோபைல் போன்ற அடிப்படை பரிசோதனைகள் செய்து கொள்ளலாம்.
சிலருக்கு லைப்போ புரோட்டீன் மற்றும் இதய கால்சியம் (CT Calcuim Score ) பரிசோதனைகள், இதய நோய் சிறப்பு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தேவைப்படலாம்.
இது தவிர மது, புகைப் பிடித்தலை அறவே தவிர்க்க வேண்டும்.
காய்கறி, பழங்கள், கீரை ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்க்கவும்.
நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சியை தினசரி வழக்கமாக்க வேண்டும்.
உடல் எடையை கட்டுப்பாட்டில் வைப்பது அவசியம்.
மன அழுத்தம் இல்லாமல் இருக்க பழக வேண்டும்.