அளவுக்கு அதிகமானால் தர்ப்பூசணியும் கெடுதல்
உடல் எடையை குறைக்க விரும்பினால், அதற்கு கோடை காலம் தான் சிறந்தது. விரைவாக உடல் எடையை குறைக்க முடியும்.
கோடை காலத்தில் அதிக தாகம் எடுக்கும். அதற்காக எல்லா நேரமும் தண்ணீர் மட்டுமே குடிக்க முடியாது. அதற்கு பதிலாக, இளநீர், மோர், நுங்கு போன்ற உணவுகளை அதிகம் எடுக்கலாம்.
தக்காளி, தர்ப்பூசணி பழத்தில் 92 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இதில், சிவப்பு நிறத்தை தரும் 'லைக்கோபின்' என்ற வேதிப் பொருள், ஹார்ட் அட்டாக், கேன்சரை தடுக்கும்; உடல் எடையையும் குறைக்கும்.
தினசரி 100 - 150 கிராமுக்கு அதிகமாக தர்ப்பூசணி சாப்பிட்டால் நீர்ச்சத்து அதிகமாகும். இதுவும் உடலுக்கு நல்லதல்ல.
புரதம், நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளோடு, நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால், உடல் எடை வேகமாக குறையும்.
95 சதவீதத்திற்கும் மேல் நீர்ச்சத்து அடங்கியுள்ள வெள்ளரிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்ப்பதால், உடல் எடை குறையும்.
பால் பொருட்கள் உடல் எடையை அதிகரிக்கும் என்ற பொதுவான கருத்துக்கு விதிவிலக்கு பனீர். இதில், 80 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. வறுத்து, பொரிக்காமல் அப்படியே சமைத்து பயன்படுத்தலாம்.