உலர் பழங்களை அதிகம் சாப்பிட்டால் பிரச்னை... கவனமாக இருங்க!
முந்திரி, திராட்சை, பாதாம் போன்ற உலர் பழங்களில் நார்ச்சத்து, ஆன்டி ஆக்சிடென்ட்கள் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் இருப்பினும், அதிகளவில் உட்கொண்டால் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதில் நார்ச்சத்து மற்றும் புரதம் இருப்பதால் ஆரோக்கியமானது; இருப்பினும், கலோரிகள், சர்க்கரை அதிகம். எனவே அதனை அதிகப்படியாக சாப்பிடுவது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
உலர் பழங்களில் பைடேட்ஸ் மற்றும் டானின்கள் என்ற சேர்மங்கள் உள்ளன. அவை அதிகமாக வயிற்றுக்குச் சென்றால் செரிமான பிரச்னைகளை ஏற்படுத்தும்.
பதப்படுத்தப்பட்ட உலர் பழங்களில் சல்பைட் நிறைந்துள்ளன. அவை தோல் வெடிப்பு, வயிற்றுப் பிடிப்புகள் முதல் ஆஸ்துமா வரை பல்வேறு அலர்ஜியைத் தூண்டும்.
புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்துள்ளதால், உலர் பழங்கள் சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பியை, குறிப்பாக முகத்தைச் சுற்றியுள்ள எண்ணெய் சுரப்பிகளை தூண்டுவதால் முகப்பருக்களுக்கு வழிவகுக்கிறது.
கலோரி அதிகமுள்ளதால் உடலில் கட்டுப்பாடற்ற வெப்பத்திற்கு வழிவகுக்கிறது; இது வளர்சிதை மாற்ற நொதிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
உலர் பழங்கள் பல் சிதைவை உண்டாக்க இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அவற்றின் ஒட்டும் தன்மை, மற்றொன்று அதிக சர்க்கரை உள்ளடக்கம். இதனால் இவற்றை சாப்பிட்டவுடனே வாய் கொப்பளிக்கவும்.
திராட்சை மற்றும் ப்ரூன் போன்ற சில உலர்ந்த பழங்களில் அதிகளவு வைட்டமின் கே உள்ளது. இது ரத்தத்தை மெலிதாக்கும் மருந்துகளுடன் எதிர்வினையாற்ற வாய்ப்பு உண்டு.