நடந்தால் போதும்... நாளங்கள் சீராகும் !

உடல் பருமன் அதிகமாக இருந்தால், ரத்தநாளங்களை அதிகம் பாதிக்கும். ரத்த நாள அடைப்பால் அதிகம் பாதிக்கப்படுவது கால்கள்.

ஆக்சிஜனும், ஊட்டச்சத்துக்களும் ரத்த நாளங்கள் வழியாகவே உடல் முழுவதும் செல்கின்றன.

ரத்த நாளங்கள் ஆரோக்கியமாக, தலை முதல் கால் வரை தடங்கல் இல்லாத, சீரான ரத்த ஓட்டத்துடன் இருப்பதே இதற்கு காரணம்.

உடற்பயிற்சி போன்ற அதிக உடல் உழைப்பு இருக்கும் சமயங்களில் ரத்தக் குழாய் விரிவடைந்து, மற்ற நேரங்களில் சுருங்கும்.

நீரிழிவு, ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, சிகரெட், உடல் பருமன், உடலுழைப்பு இல்லாமல் இருப்பது போன்ற காரணங்களால், ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படக்கூடும்.

இதனால், சுருங்கி விரியும் தன்மை குறைந்து, செல்களுக்கு போதுமான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச் சத்துக்கள் கிடைப்பதில்லை.

எனவே, தினமும் முடிந்தளவு நடை பயிற்சி செய்து, கால்களில் ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.