நீங்கள் அணியும் ஜீன்ஸ் குறித்த அறியாத் தகவல்கள்...!

நீல நிற டோர்ன் ஜீன், ஸ்லிம் ஃபிட் எலாஸ்டிக் ஜீன், ஜாகர் ஜீன், பூட் கட் ஜீன் என ஜீன்ஸ் பேண்ட்களில் பல ரகங்கள் வந்துவிட்டன.

பதினெட்டு வயதான பதின்பருவத்தினர் முதல் நடுத்தர வயது ஆண்கள், பெண்கள், வயோதிகர்கள் வரை அனைவரும் ஜீன்ஸ், ஷர்ட்ஸ், ஜாக்கெட், ட்ரவுசர் என ஏதாவது ஒரு டெனிம் ஆடையை அணிய விரும்புகின்றனர்.

18-ம் நூற்றாண்டில் லீவைஸ் ஸ்ட்ராஸ் என்ற அமெரிக்க ஆடை வடிவமைப்பாளர் டெனிம் ஜீன்ஸ்-ஐ கண்டுபிடித்தார்.

சுரங்கத் தொழிலாளர்களுக்கு கிழியாத கனமான ஆடை தயாரிக்க லீவைஸ் ஆய்வு மேற்கொண்டபோது ஜீன்ஸ்-ஐ உருவாக்கினார். இதன் ஓரங்கள் கிழியாமல் இருக்க ரிவிட் அடித்து ஜீன்ஸை உருவாக்கினார். இதுவே பின்னாட்களின் பேஷனாக மாறியது.

ஜீன்ஸுக்கு இண்டிகோ டை பயன்படுகிறது. இது இந்தியாவில் தயாராகி, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு செல்கிறது.

19-ம் நூற்றாண்டில் ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் எதேச்சையாக கிழிந்த மாடல் ஜீன்ஸை அறிமுகப்படுத்த, அது ஜீன்ஸ் தயாரிப்பில் புதிய டிரெண்ட் உருவாக்கியது.

ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் மைக்கேல் ஜாக்ஸன்வரை பல பிரபலங்கள் ஜீன்ஸின் புகழை உச்சிக்கு கொண்டு சென்றனர்.

18-ம் நூற்றாண்டில் சுரங்கத் தொழிலாளர்கள் நேரம் பார்க்க பாக்கெட் வாட்ச் பயன்படுத்தினர். கையில் அணியும் வாட்ச் அப்போது பயன்பாட்டில் இல்லை. இதனால் பாக்கெட் வாட்ச் வைக்க ஜீன்ஸில் குட்டி பாக்கெட் ஒன்று சேர்த்து தைக்கப்பட்டது.