விஜய் வருகையால் பரபரப்பான இன்ஸ்டாகிராம்
சோஷியல் மீடியா என்றாலே சினிமா பிரபலங்கள் பலரும் இன்ஸ்டாகிராமை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக தங்களின் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவருகின்றனர்.
தமிழ் சினிமாவின் வசூல் நடிகராக இருக்கும் விஜய் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, திடீரென இன்ஸ்டாகிராம் தளத்தில் புதிய கணக்கு ஒன்றை துவக்கியுள்ளார்.
வந்த சில மணி நேரங்களிலேயே 1 மில்லியன் பாலோயர்கள், 'ஹலோ நண்பர்களே மற்றும் நண்பிகளே' என்ற தனது முதல் பதிவுக்கு 55 லட்சம் லைக்குகள் என சாதனை புரிந்துள்ளார் விஜய்.
கடந்த இரண்டு நாட்களில் அவருடைய இன்ஸ்டாகிராம் கணக்கை பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 5 மில்லியனைக் கடந்துள்ளது.
விஜய் வருகைக்குப் பிறகு அத்தளமே கொஞ்சம் பரபரப்பாகி உள்ளது. தமிழ் நடிகர்களில் சிலம்பரசன் 11 மில்லியன் பாலோயர்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
விரைவில் அதிக பாலோயர்களைப் பெறும் தமிழ் நடிகர் என்ற சாதனையை விஜய் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்னிந்திய அளவில் இன்ஸ்டாகிராம் தளத்தில் 20 மில்லியன் பாலோயர்களுடன் தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன் முதலிடத்தில் உள்ளார். இந்த சாதனையையும் விஜய் விரைவில் முறியடிக்க வாய்ப்புள்ளது.