காலை உணவாக வாழைப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின்கள் பி6 மற்றும் சி, கார்போஹைட்ரேட்டுகள், இயற்கை சர்க்கரை உட்பட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் வாழைப்பழத்தில் நிறைந்துள்ளன.
காலையில் இதை சாப்பிடும்போது அதிகளவில் ஆற்றல் கிடைக்கக்கூடும்.
அதேவேளையில், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் இயற்கையான சர்க்கரைகள் உள்ளதால், தனியாக உட்கொள்ளும்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே, காலை உணவுக்கு முன் அல்லது சமச்சீரான காலை உணவின் ஒரு பகுதியாக வாழைப்பழம் சாப்பிடுவது சிறப்பானது. இது வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகிறது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
மீடியம் சைஸ் வாழைப்பழத்தில் சுமார் 3 கிராம் நார்ச்சத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
தனியாக வாழைப்பழத்தை சாப்பிடுவதை விட புரதம் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேப்படுத்தக்கூடிய கொழுப்புச்சத்துகள் அடங்கிய உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம்.
அப்போது சர்க்கரையை கட்டுக்குள் வைப்பதுடன், ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.
எனவே, வாழைப்பழத்துடன், சியா விதைகள், ஓட்ஸ் கலந்து ஸ்மூத்தியாகவோ, உலர்விதைகள், கொட்டைகளுடன் நறுக்கிய வாழைப்பழ துண்டுகளை கலந்து சாலட்டாகவோ என பல்வேறு விதங்களில் உணவாக சாப்பிடலாம்.