கல்வி கடனுக்கு மானியம் கிடைக்குமா? எவ்வளவு கிடைக்கும்?
கல்விக்கடன் பெற்றவுடன், வட்டியை கட்டலாமா என கேட்டால், 4 ஆண்டு கழித்து மானியம் கழிக்கப்படும், அப்போது கட்டுங்கள் என வங்கியில் கூறும்போது பலரும் குழப்பமடைவர்.
ஆனால், தகுதியான மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்விக் கடன் வட்டி மானியத் திட்டம் (CSIS) நடைமுறையிலுள்ளது.
குடும்ப ஆண்டு வருமானம் 4.5 லட்ச ரூபாய்க்குள் இருந்தால், படிக்கும் காலம் மற்றும் படிப்பு முடிந்த ஓராண்டு வரையிலான முழு வட்டியையும் அரசே செலுத்திவிடும்.
இந்த மானியத்திற்கு உச்ச வரம்பு கிடையாது; குறிப்பிட்ட சலுகைக் காலத்தில் உங்கள் கடனுக்கு விதிக்கப்படும் வட்டித் தொகை முழுதுமே மானியமாகக் கழிக்கப்படும்.
இதற்கு உங்களின் வருமானச் சான்றிதழை முறையாக அரசின் மானிய இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என வங்கி மேலாளரிடம் கேட்டு உறுதி செய்ய வேண்டும்.
எனவே, உங்கள் மகளோ அல்லது மகனோ படிப்பு முடியும் வரை நீங்கள் வட்டியோ அசலோ செலுத்தத் தேவையில்லை.
மானியம் வரவு வைக்கப்பட்ட பிறகே தவணை துவங்கும் என்பதால், பிள்ளைகள் நிம்மதியாகப் படிக்கலாம்.