வாதம், பித்தம், கபத்திற்கும் தோல் நோய்களும் சம்மந்தம் உண்டா?
வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சமநிலையில் இல்லாமல் போகும் போது, உடலில் தோல் நோய்கள் ஏற்படலாம் என சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வாதம் அதிகரிக்கும் போது, தோலில் கருப்பு அல்லது கருஞ்சிவப்பு நிறம், வறட்சி, வெடிப்பு, வலி, படர் தாமரை எனப்படும் சொரியாசிஸ் உட்பட பல நோய்கள் வரலாம்.
பித்தம் அதிகமானால், சிவப்பு, மஞ்சள், பச்சை நிறமாக தோல் மாறுதல், எரிச்சல், புண், கொப்புளம், தோல் சிதைவு காணப்படும்.
கபம் அதிகரித்தால், தோல் வெள்ளை நிறமாதல், தடிப்பு, அரிப்பு, கிருமி தொற்று, உணர்வு குறைதல் ஏற்படலாம்.
மலச்சிக்கல் பிரச்னை இருந்தால் ரத்தம் அசுத்தமாகி, வாதம் மிகுதியாகலாம்.
சிறுதானியங்கள், வாழைக்காய், கொள்ளு, பாகற்காய், குளத்து மீன் போன்ற உணவுகள், சிலருக்கு , கரப்பான் எனப்படும் 'எக்சீமா' நோய் ஏற்படுத்தும்.
தீவிர மன அழுத்தம், நீரிழிவு, தைராய்டு கோளாறுகள், ஆட்டோ இம்யூன் நோய்களால் தோலில் மாற்றம் ஏற்படலாம்.
மாசடைந்த காற்றில் உள்ள நச்சுகள், துாசு, புகை, அதிகமான வெயில், தோலில் ஊடுருவும் புற ஊதா கதிர்கள், சில வகை பூச்சி கடியாலும் தோல் நோய் ஏற்படும்.