ஜூலை 25 : உலக நீரில் மூழ்கும் தடுப்பு நாள்!
உலகில் ஆண்டு தோறும் 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் நீரில் மூழ்கி உயிரிழப்பதாக ஆய்வறிக்கை கூறிகின்றது.
2021 ஆம் ஆண்டு உலகளவில் பொதுமக்கள் நீரில் மூழ்குவதை தடுக்கும் நோக்கத்துடன் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் உலக நீரில் மூழ்கும் தடுப்பு தினம் தொடங்கப்பட்டது.
நீரில் மூழ்குவதால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த நாளின் நோக்கமாகும்.
குறிப்பாக இளம் பருவத்தினர், குழந்தைகளின் இறப்புக்கான முக்கிய காரணமாக நீரில் மூழ்குவது பட்டியலிடப்பட்டுள்ளது. அதை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
நீரில் மூழ்குவது கடலோரப் பகுதிகள் மட்டுமல்லாமல் ஆறுகள், ஏரிகள், நீச்சல் குளங்கள், வெள்ளம் மற்றும் போக்குவரத்து நீர்வழிகள் போன்ற நீர் காணப்படும் இடங்களில் விபத்துகள் நிகழலாம்.
நீரில் மூழ்கும் இறப்புகளில் 90% க்கும் அதிகமானவை ஆறுகள், ஏரிகள், கிணறுகள், வீட்டு நீர் சேமிப்பு தொட்டிகள் மற்றும் நீச்சல் குளங்களில் நிகழ்கின்றன.
காலநிலை மாற்றம், உயரும் கடல் மட்டம், சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் பாதுகாப்பற்ற நீர்வழிகள் ஆகியவற்றின் விளைவுகள் நீரில் மூழ்குவதைத் தடுக்கும் முயற்சிகளுக்கு கூடுதல் சவால்களை ஏற்படுத்துகின்றன.
இந்த தினம் மூலம் சமூகங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தின் மீது நீரில் மூழ்குவதால் ஏற்படும் மோசமான விளைவுகளை அறிவூட்ட ஒரு வாய்ப்பை ஏற்படுகிறது.