சிறுநீரக கோளாறும் அதற்கான சிகிச்சை முறைகளும்!
ஐம்பது வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு, சிறுநீர் தொடர்பான பிரச்னைகள், பொதுவான ஒன்றாக உள்ளது என டாக்டர்கள் கூறுகின்றனர்.
இரவு நேரத்தில் அடிக்கடி பாத்ரூம் செல்வது, எத்தனை முறை கழித்தாலும் முழுமையான உணர்வு இல்லாதது போன்ற அறிகுறிகள் காணப்படும்.
மேலும் புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்துடன் இருப்பது சிறுநீரக கோளாறுக்கான முக்கிய அறிகுறி.
புரோஸ்டேட் சுரப்பியில் வீக்கம் உள்ளதா, சிறுநீர் தங்குகிறதா, கேன்சர் பாதிப்பு உள்ளதா என்பதை அறிய பரிசோதனை செய்ய வேண்டும். அல்ட்ரா சவுண்டு, ரத்தப் பரிசோதனை இதில் அடங்கும்.
சிறுநீர் பிரச்னை உள்ள 100 பேரில், 80 பேருக்கு மாத்திரைகள் வாயிலாகவே பிரச்னையை சரி செய்ய முடியும் என கூறப்படுகிறது.
மாத்திரை சாப்பிட்டும் பிரச்னை சரியாகாமல் இருப்போருக்கு தான், அறுவை சிகிச்சை தேவைப்படும். அதற்கு நுண்துளை அறுவை சிகிச்சையில் எளிதாக சரி செய்யலாம்.
சிறுநீர் வெளியேறும் பாதை வழியே நுண்ணிய குழாயைச் செலுத்தி, புரோஸ்டேட் சுரப்பியில் உள்ள வீக்கத்தை சரி செய்தாலே, முழுமையான தீர்வு கிடைத்து விடும்.
'டே கேர்' என்ற முறையில், காலையில் வந்து, மாலையில் வீட்டிற்கு சென்று விடலாம். அத்தனை சுலபமான சிகிச்சை இது.
இரண்டொரு நாட்கள் சிறுநீர் வெளியேற குழாய் பொருத்த வேண்டியிருக்கும். மற்றபடி எந்த சிக்கலும் இருக்காது என கூறப்படுகிறது.