எம்ஜிஆர் முதல் விஜய் வரை - கட்சி தொடங்கிய ஹீரோஸ் லிஸ்ட்!
1972ல் எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார்.
1989ல் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தமிழக முன்னேற்ற முன்னணி என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார்.
அதே 1989ல் நடிகர் பாக்யராஜ். எம்.ஜி.ஆர். மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார்.
1991ல் டி.ராஜேந்தர் தாயக மறுமலர்ச்சி கழகம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்தார்
2005ல் மறைந்த விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை துவக்கினார்.
2007ல் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை ஆரம்பித்தார்.
2009ல் கார்த்திக் நாடாளும் மக்கள் கட்சி என்ற பெயரில் கட்சி துவக்கினார். பின்பு அதை கலைத்துவிட்டு 'மனித உரிமை காக்கும் கட்சி' என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
2016ல் நகைச்சுவை நடிகர் கருணாஸ் முக்குலத்தோர் புலிகள் படை என்ற பெயரில் தனி அரசியல் கட்சியை ஆரம்பித்தார்.
2018ல் நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் தனிக்கட்சி ஆரம்பித்தார்.
தற்போது 2024ல் நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார்.