நீச்சல் போட்டியில் தேசிய சாதனை படைத்த மாதவன் மகன்

இயக்குநர் மணிரத்னத்தின் அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகுக்கு அறிமுகமானவர் மாதவன்.

'மேடி' என பலராலும் கொண்டாடப்பட்ட இவர் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்து தற்போது 'ராக்கெட்டரி நம்பி'யாக இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

முன்னணி நடிகர்கள் பலரும் தங்களின் வாரிசை சினிமா நட்சத்திரமாக மாற்றிக் கொண்டிருக்கும்போது, நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மாதவன் தன் மகன் வேதாந்த்தை விளையாட்டுத் துறையில் ஈடுபடுத்தி வருகிறார்.

இளம் நீச்சல் வீரராக பல பதக்கங்களை அள்ளி வரும் நிலையில், 2026ல் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெறும் இலக்கில் துபாயில் குடும்பத்தோடு தங்கி வேதாந்துக்கு பயிற்சி அளிப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் புவனேஸ்வரில் நடந்த 48-வது ஜூனியர் நேஷனல் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் வேதாந்த், புதிய சாதனை படைத்து தங்கம் வென்றுள்ளார்.

1500 மீட்டர் ப்ரீ ஸ்டைல் பிரிவில் முந்தைய சாதனையான 16:06:43 என்பதை 16:01:73 என்ற விநாடிகளில் தூரத்தை கடந்து முறியடித்துள்ளார் வேதாந்த்.