மகாளய பட்சம் ஆரம்பம்; புண்ணியம் மிக்க 15 தினங்கள்!
ஆசி வழங்க முன்னோர் நம் வீட்டு வாசலில் காத்திருக்கும் காலம் தான் மகாளய பட்சம்.
புரட்டாசி பெளர்ணமியில் முதல் அமாவாசை வரை உள்ள காலம் மகளாய பட்சம் ஆகும்
இந்த 15 புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு செய்வது சிறந்ததாகும்.
செப்டம்பர் 8 முதல் செப்டம்பர் 21 வரை மகாளய பட்ச காலமாகும். மகாளய பட்சம் அமாவாசையன்று முடிவடையும்.
இந்த காலகட்டத்தில் வரும் பரணி, மஹாபரணி என்றும், அஷ்டமி, மத்பாஷ்டமி என்றும் திரயோதசி கஜச்சாயை என்றும் கூறப்படும்.
மாதந்தோறும் முன்னோர்களுக்கு தர்பணம் செய்ய முடியாதவர்கள் இந்தக் காலத்தில் செய்வதால் 12 மாதங்களிலும் செய்த பலன் கிடைக்கும்!
இந்த காலத்தில் செய்யும் தானம் பல மடங்கு புண்ணியம் தரும்
இன்று வீட்டில் முன்னோர்களை நினைத்து செய்யும் வழிபாடு வளமுடன் வாழவைக்கும்..!