வாழ்வை மகிழ்ச்சியாக கொண்டாட இந்த பழக்கங்களை வழக்கமாக்குங்கள்!
புன்னகை... இது இரு வழி பாதை; மற்றவரையும் தொற்றிக்கொள்ளும். தாழ் உணர்ச்சியால் பாதிக்கப்பட்டால் புன்னகை செய்து என்ன நடக்கிறது என பாருங்கள். புன்னகையுடன் காலைப்பொழுதை துவக்குங்கள்.
உடற்பயிற்சி... இது உடலுக்கு மட்டுமல்ல, மன இறுக்கத்தை குறைத்து, சுய எண்ணங்கள் மற்றும் மகிழ்ச்சியை அதிகரிக்கவும் செய்யும். நேரமில்லை என புகார் கூறாமல் இரவு உணவுக்கு பின் கூட வாக்கிங் செல்லலாம்.
7 மணி நேர தூக்கம் அவசியம்... பகலில் தூக்கம், சோர்வு ஏற்பட்டால் உங்களுக்கு அதிக ஓய்வு தேவை என பொருள். நல்ல ஆரோக்கியம், மூளை செயல்பாடு, நல்வாழ்வுக்கு போதிய தூக்கம் இன்றியமையாதது.
உணவில் கவனம்... உணவுக்கும் மனதுக்கும் தொடர்பு உண்டு. புரதம் நிறைந்த இறைச்சி, பருப்பு வகைகள், பால் பொருட்கள் போன்றவை டோபமைன் உள்ளிட்டவற்றை வெளியிட்டு எனர்ஜி தரும்.
பாராட்டுங்கள்... பிறரை மனதார பாராட்டும் போது அவர்களுடைய நாள் மட்டுமல்ல, உங்களின் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.
ஒப்பிடாதீர்கள்... உங்களை பிறருடன் ஒப்பிடாதீர்கள். இதனால் அதிருப்தியாகவும், தாழ் நிலைக்கும், ஏன் மனச்சோர்வுக்கு கூட உள்ளாவீர்கள். தற்போது இருக்கும் நிலையை நினைத்து திருப்திக் கொள்ளுங்கள்.
தேவைகள் அதிகம் இருந்தால் அதனை அடைய தேவையான முயற்சி செய்யுங்கள். இவை எல்லாம் உங்களை உலகின் மகிழ்ச்சி மிக்க மனிதராக்கும்.