குட்டீஸ்களுக்கு பிடித்தமான மினி வெஜ் ரோல்
தேவையானப் பொருட்கள்: மைதா - 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய், உப்பு, மிளகுத் துாள் - தேவையான அளவு.
கேரட், குடைமிளகாய், கோஸ், வெங்காயம், பீன்ஸ் - தலா 100 கிராம்.
கேரட், குடைமிளகாய், கோஸ், வெங்காயம் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றை, மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன், காய்கறி கலவையை போட்டு வதக்கி உப்பு, மிளகு துாள் சேர்த்து இறக்கவும்.
ஆறியதும், சிறிய சிறிய ரோல்களாக உருட்டி வைக்கவும்.
மைதாவில் தண்ணீர் சேர்த்து, கெட்டியாக கரைக்கவும். உருட்டிய ரோல்களை மைதா கலவையில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் மினி வெஜ்ரோல் ரெடி.
சாஸுடன் சேர்த்து சாப்பிட, சுவை அள்ளும். குழந்தைகள் ஆர்வமுடன் விரும்பி உண்பர்.