தாய்மை பாதுகாப்பு தினம் இன்று

தாய்மையை போற்றவும், கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் மத்திய அரசு சார்பில் ஏப். 11ல் தேசிய பாதுகாப்பான தாய்மை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் முக்கியமான தருணம்.

இந்நேரத்தில் அவர்களது ஆரோக்கியம், பிரசவத்துக்குப்பின் தாய், குழந்தையின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

கர்ப்பிணிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து, தரமான மருத்துவ வசதி, பிரசவத்துக்குப் பின் குழந்தைகளுக்கான தடுப்பூசி உள்ளிட்ட வசதிகளை வழங்க வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது.

வைட் ரிப்பன் அலையன்ஸ் இந்தியா அமைப்பால் துவக்கப்பட்ட இத்தினம், பிரசவத்தின்போது பெண்கள் யாரும் தன் உயிரை இழக்கக் கூடாது என வலியுறுத்துகிறது.

மேலும், தாய்மார்களின் இறப்பு விகிதங்களைக் குறைக்க, உலக சுகாதார அமைப்பு போன்ற நிறுவனங்கள் எடுக்கும் முயற்சிகளை ஊக்குவிக்கிறது.

நம் நாட்டில் பாதுகாப்பான தாய்மையை உறுதி செய்வது என்பது வெறும் சுகாதார இலக்கு மட்டுமின்றி, சமூகப் பொறுப்பாகவும் உள்ளது.

எனவே, இத்தினத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அனைவரும் பங்களிக்க முன்வர வேண்டும்.