மருந்தாகும் இசை... ஆய்வில் தகவல்!

இசையை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது.

இந்நிலையில் நோயாளிகளின் வலியை குறைக்க இசை உதவுவதாக அமெரிக்க ஆய்வு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த நர்ஸ் ரோட் சலே சாய், ஆப்ரேஷன் வார்டுகளில் நோயாளிகளை பராமரிக்கும் போது மருந்துகள் தவிர, வீணை உள்ளிட்ட பல்வேறு கருவிகளை பயன்படுத்தினார்.

வீணை வாசிப்பது, இசை ஒலிப்பது என பல வழிகளை கையாண்டார்.

இவை அவர்களின் வலியை குறைத்ததுடன், ரத்த அழுத்தத்தையும் குறைத்தது.

மேலும், நோயாளிகள் வலி நிவாரணி மருந்துகளை கேட்பதும் குறைந்தது கண்டறியப்பட்டது.