நம்ம ஊட்டியில மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய இடங்கள்...!
ஊட்டி சென்றாலே பலரும் விசிட் அடிக்கும் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது பொட்டானிக்கல் கார்டன் என்ற தாவரவியல் பூங்கா தான்.
2,623 மீ., உயரத்தில் அமைந்துள்ள தொட்டபெட்டா தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றாகவும் உள்ளது. இங்கு மேகக்கூட்டங்கள் உரசிச் செல்லும் அழகை ரசித்தால் நேரம் போவதே தெரியாது.
ஊட்டியில் பார்க்க வேண்டிய பல சுற்றுலாத் தலங்களில், கர்நாடகா ஹார்டிகல்சர் கார்டன் என்ற தோட்டக்கலைத் தோட்டம், இன்னும் பல சுற்றுலாப் பயணிகளால் சரிவர ஆராயப்படாத இடமாகும்.
ஊட்டிக்கு சென்றால் பைக்காரா அருவியை பார்க்காமல் சுற்றுலாவா என கேட்கத் தோன்றும். அருகிலுள்ள போட் ஹவுஸில் ஜாலியாக ஒரு ரைடு சென்று மகிழலாம்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு இயக்கப்படும் பாரம்பரியமான பொம்மை மலை ரயிலில் பயணம் செய்யும் போது, வழியெங்கும் இயற்கை அன்னையின் விருந்தை தாராளமாக ரசிக்கலாம்.
கர்நாடகா - கேரளா மாநில எல்லையில் அமைந்திருக்கும் முதுமலை வனவிலங்கு காப்பகம், தென்னிந்தியாவின் முதல் வனக்காப்பகமாகும். யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது.
மேற்குத்தொடர்ச்சி மலையில் மாசுபடாத இடங்களில் ஒன்றாக உள்ளது மசினக்குடி; ஊட்டி, குன்னூர் மற்றும் கோத்தகிரிக்கு அடுத்தபடியாக தன் இயற்கை அழகால் இளசுகளை வெகுவாக ஈர்த்து வருகிறது.