ஐயா படம் மூலம் அறிமுகமாகி பல ஏற்ற இறக்கங்களை சந்தித்த நயன்தாரா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன் கடந்த ஜூனில் இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார்.

மகாபலிபுரத்தில் இருக்கும் ஷெராட்டன் கிராண்ட் ரிசார்ட்டில் நயன் - விக்னேஷ் சிவன் திருமண வைபவம் கோலாகலமாக நடந்தது.

ரஜினிகாந்த், ஷாருக்கான், மணிரத்னம், ஜெயம் ரவி, சூர்யா, விஜய்சேதுபதி மற்றும் கார்த்தி உட்பட கோலிவுட், பாலிவுட் என அனைத்து பிரபலங்களும் வருகைத் தந்து இருவரையும் வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

திருமணம் முடிந்து ஒரு மாதத்துக்கும் மேலான நிலையில் இவரின் திருமண புகைப்படங்கள் இன்னமும் சமூகவலைத்தளங்களில் வைரலாக உள்ளது.

அதன்படி, சூப்பர் ஸ்டார் ரஜினி நயனின் கையைப்பிடித்து வாழ்த்திய போட்டோ சமீபத்தில் இன்ஸ்டாவில் வைரலாகியுள்ளது; அருகில் இயக்குநர் மணிரத்னம் உள்ளார்.

இருவரையும் சூப்பர் ஸ்டார் ரஜினியும், இயக்குநர் மணிரத்னமும் அன்பளிப்பு அளித்து வாழ்த்தினர்.

நயனை அரவணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்.

இருவரையும் வாழ்த்திய ஷாருக் கான், இயக்குநர் அட்லி... இதுபோன்று தினமும் ஏதாவது ஒரு செலிபிரேட்டிகளுடன் எடுத்த போட்டோகள் இன்ஸ்டாவில் இன்னமும் வைரலாகிக் கொண்டே உள்ளது.