மருத்துவ குணங்கள் நிறைந்த நூக்கல்!

நூக்கலில் அதிக நீர்ச்சத்து உள்ள நிலையில், வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

வாரம் இருமுறை இதை சாப்பிட ஜீரண சக்தியை அதிகரித்து, செரிமானத்தை சீராக்கும். வயிற்று பிரச்னைகள் மற்றும் வயிற்றுப்புண்கள் உண்டாக்கக் கூடிய செல்களை எதிர்க்கும் தன்மையுடையது.

உடலில் ரத்தத்தின் அளவை சரியாக வைத்து, உடல் எடையையும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

இதிலுள்ள வைட்டமின் ஏ நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

நூக்கலை சாப்பிடுவதால் குடல் நாளங்கள் உறுதிப்படும்; எலும்புகள் உறுதியாகும்.

இதன் காய் மற்றும் இலையிலும் அதிக அளவிலான ஃபோலேட் சத்து நிறைந்துள்ளதால் இதயத்தை பாதுகாப்பதுடன், ஹார்ட் அட்டாக் பிரச்னை வராமல் தடுக்கிறது.

குழந்தை பெற்ற பெண்கள் தினமும் இதை சாப்பிட தாய்ப்பால் அதிகளவில் சுரக்கும்.

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் உற்பத்தியை நூக்கல் இரு மடங்காக அதிகரிக்கிறது.